வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்வடுங்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தனது காரில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும்போது காட்பாடி அடுத்த தொண்டான்துளசி பகுதியில் அருகே காரின் முன்பக்கம் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கீழே இறங்கி பார்த்தபோது கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லத்தேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் சாலையில் செல்லும்போது காய்ந்த புற்க்கள் காரின் முன்பக்க எஞ்சின் பகுதியில் சிக்கி என்ஜின் சூடு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.