வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று (மார்ச் 11) நடந்தது. இந்த பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் இணை பதிவாளர்கள் ராமதாஸ் (மாவட்ட வங்கி), சந்தானம் (கற்பகம் கூட்டுறவு) உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.