வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கை பெற்று அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதி களில் கொசு மருந்து அடித்தல், சுகாதார பணிகள், மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை, தரைத் தள குடிநீர் தொட்டிகளில் தண்ணீரின் தன்மை எப்படி உள்ளது என்று ஆய்வு செய்து அதன் அறிக்கையை வழங்குகிறார்கள். வாரந்தோறும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவல கம் மூலம் 100 குடிநீர் தொட்டிகளின் அறிக்கை தருகிறார்கள். அந்த அறிக்கையில் அடிப்படையில் எந்த பகுதியில் குளோரின் அளவு குறைவாக உள்ளதோ அங்கு அதனை சரி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டது. தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. எனினும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து அதே பணியில் ஈடுபட வேண்டும். அவர்களை எக்காரணத்தை கொண்டும் வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது என ஆட்சியர் கூறினார்.