உலகளவில் வாழும் தமிழர்களால் இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வலைப்பக்கத்தில் வேட்டி-சட்டையுடன் புத்தாண்டு வாழ்த்து பதிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவிலும், பிற வீரர்கள் அவருடன் இருக்கின்றனர். தமிழகத்தின் தத்துப்பிள்ளை என போற்றப்படும் தோனியும் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்.