தேர்தலில் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பதில் பெண் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமானது. தனது திரைப்படங்கள் மூலம் லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் ஆதரவை பெற்றுள்ள விஜய் அதனை தவெகவுக்கு வாக்குகளாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை அறிவிக்கவும், 'வாய்ஸ் மெசேஜ்' மூலம் பெண்களிடம் ஆதரவு கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.