போலி சமூக நீதி பேசி, பல ஆண்டு காலம் மக்களை ஏமாற்றி வரும் வேடதாரிகளை அம்பலப்படுத்துவோம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளையும், நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்வோம். போலி சமூக நீதி பேசி, பல ஆண்டு காலம் நம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேடதாரிகளை அம்பலப்படுத்துவோம் என கூறியுள்ளார்.