வேலூர் காட்பாடி அடுத்த சேர்க்காடு - திருவலம் கூட்ரோடு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரியின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பேருந்து அருகே யாரும் இல்லாத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருவலம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பொறி ஏற்பட்டு பேருந்து எரிந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.