
வேலூரில் ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடி சடலம்
வேலூர் லத்தேரி அருகே பட்டியூர் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் கட்டியணைத்தவாறு சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், "உயிரிழந்தவர்கள் லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோகிலா (24) என்பதும் தெரிந்துள்ளது. மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கோகிலா உடன் பழக்கம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் கடலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மற்றும் கோகிலா இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவேண்டுமென போலீசார் அழைத்துள்ளனர். கடலூர் செல்வதற்காக இன்று இருசக்கர வாகனத்தில் கிளம்பிய இருவரும், பிரிந்து விடுவோமோ என பயந்து தண்டவாளத்தில் கட்டியணைத்தபடி தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது". உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.