புலிகுட்டை: பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மறுப்பு தெரிவித்து சாலை மறியல்

78பார்த்தது
புலிகுட்டை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மறுப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் எவ. வேலு பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட கட்டிட பணியை அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் புலிக்குட்டை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் இந்த இடத்தில் பத்திரபதிவு அலுவலகம் கட்டக்கூடாது என்றும் இப்பகுதிக்கு அரசு பள்ளி கட்டிடம் கட்டி தர சொல்லி திருப்பத்தூர் சேலம் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த கிராமிய காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் நவநீதம் மற்றும் கிராம நிருவாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் பேசுகையில் முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள் தற்பொழுது கட்டிடப் பணியை நிறுத்தி வைப்பதாக கூறியதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி