ராணிப்பேட்டை எடுத்த இலுப்பை தண்டலம் ஓடை பகுதியில் மண் திருடுவதாக தக்கோலம் போலீசாருக்கு இன்று அப்பகுதி மக்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது மண் திருடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை, தக்கோலம் போலீசார் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.