திருப்பத்தூரில் திமுக சார்பில் மும்மொழி எதிர்த்து ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
திருப்பத்தூரில் திமுக மாணவரணி கூட்டமைப்பு சார்பில் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மும்மொழிக் கல்வி கொள்கையை என்ற பெயரில் இந்தியை தமிழ்நாட்டில் திணித்து மீண்டும் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படுவதாக கூறி பாஜக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து நிலையத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பாரத ஸ்டேட் வங்கி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி