வேலூர்: நியாய விலை கடையில் நகர்மன்ற தலைவர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நேற்று மேல்விஷாரம் நகரமன்றத் தலைவர் கே. குல்ஜார் அஹமது நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அதே போல் கீழ்விஷாரம் சலீம் நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த ஆய்வு செய்தார்.