வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக, டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற கைதியை, டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டில் சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தியதுடன், ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடியதாகக் கூறி அடித்து சித்ரவதை செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.