ராணிப்பேட்டை: தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்து!

62பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் விஜயகுமார் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி