அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எம்எல்ஏக்கள் குடியிறுப்பில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் சோதனை நடக்கிறது. அமைச்சராக இருந்தபோது, கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை நடக்கிறது.