வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மீதான ரூ.3 கோடி செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்தது டாகா நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஷகிப், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பவில்லை எனப்படுகிறது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.