வேலூர் அடுக்கம்பாறை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் நிலையில், ப்ராஜெக்ட் மற்றும் படிப்பிற்காக லேப்டாப் இல்லாமல் அவதி அடைந்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இம்தியாஸ் புதிய Hp லேப்டாப்பை வழங்க முடிவு செய்தார். பின்னர் வேலூர் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு கபிலனை வரவழைத்து தமிழக வெற்றிக்கழக வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இம்தியாஸ் வழங்கினார். படிப்பிற்காக கல்லூரி மாணவனுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கிடைத்த உதவி பாராட்டை பெற்றுள்ளது.