குடியாத்தம் - Kudiyatham

அவர்களால் முடியாது. எங்களால் முடியும்; தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி

அவர்களால் முடியாது. எங்களால் முடியும்; தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி

வேலூரில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திமுகவினரை மேடையில் வைத்துக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் எப்படி பேச முடியும் என்று தமிழிசை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களால் முடியாது. எங்களால் முடியும். ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து முத்தமிழறிஞர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் பேசியிருக்கிறேன். இதை ஏன் பேசுகிறீர்கள் என்று கலைஞர் ஒருநாளும் கேட்டது கிடையாது. திமுக கூட்டணியில் இருக்கின்ற பொழுது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களோடு பயணித்திருக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்த போது மற்ற கூட்டணியில் உள்ள தலைவர்களோடு கைகோர்த்து பயணப்பட்டேன். எனக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. என்னால் பேச முடியும், அவ்வளவுதான். தூதரகம் மற்றும் கலை பண்பாட்டு மையங்களில் தமிழாசிரியர் பணிக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளதே, "அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியை திணிக்க வேண்டும். இந்தியாவை ஒட்டுமொத்தமாக இந்தி பேசக்கூடிய தேசமாக மாற்ற வேண்டும். அயல் நாடுகளில் இருந்தாலும் அவர்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். சனாதனத்தை திணிப்பதாக இருந்தாலும் சரி சமஸ்கிருதத்தை திணிப்பதாக இருந்தாலும் சரி அவர்களின் செயல் திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்றார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా