குடியாத்தம்: பகுதிநேர ரேஷன் கடை

68பார்த்தது
குடியாத்தம்: பகுதிநேர ரேஷன் கடை
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலியார் ஏரி மற்றும் கல்லப்பாடி காலனி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.

கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சார் பதிவாளர் தனலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா கருணாநிதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன் வரவேற்றார்.

குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என். இ. சத்யானந்தம் கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தி. மு. க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மஞ்சுளா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி