ஈரோடு: உடையாம்பாளையத்தை சேர்ந்த சரவணன்(36) - மஞ்சுளா(30) தம்பதிக்கு காவியா (13), அட்சயா (10) என்ற இரு மகள்கள் உள்ளனர். 5ம் வகுப்பு படித்து வந்த அட்சயாவை சரவணனும், மஞ்சுளாவும் வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அட்சயா வீட்டில் நேற்று முன்தினம் (ஜன. 18) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.