வேலூர்: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி

69பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நாம் தமிழர் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் செய்தியாளரிடம் பேசிய வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "நாங்கள் நாம் தமிழர் கட்சியின் ஆரம்பம் முதலே சீமானுடன் பயணித்து வருகிறோம் என்றும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். 

தலைமையில் உள்ள ஒரு சிலர் சீமானுடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்வதை தடுத்து வருவதாகவும், கட்சி செயல்பாடு குறித்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தலைமையில் உள்ள ஒரு சிலரை வைத்துக்கொண்டு அவர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்த கட்டமைப்பு தற்போது இல்லை எனவும், எனவே தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாகவும், கட்சியை முன்னெடுத்து செல்ல முடியாத காரணத்தினாலும் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி