சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி - பசுமாடு படுகாயம்!

85பார்த்தது
வேலூர் மாவட்டம் கே. வி குப்பம் அருகே தேவரிஷி குப்பம் பஞ்சாயத்து உட்பட்ட மைலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் பசுமாட்டை சிறுத்தை தாக்கியதில் பசு மாடுபடுகாயம் அடைந்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான கன்று குட்டியை சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி உயிரிழந்துள்ளது. கோழிகளையும் சிறுத்தை தாக்கி இழுத்து சென்றுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தை தாக்கி கன்று குட்டி, ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து பலியாகி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனத்துறையினர் விரைந்து சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி