குடியாத்தம்: ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

59பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த காலனி தொழிற்சாலைக்கு குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மேல்பட்டி அடுத்த கிருஷ்ணம்பள்ளி கார்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளிகள் தனியார் காலனி தொழிற்சாலைக்கு பயணியர் ஆட்டோவில் வரும்போது எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ ஓட்டுனர் பிரேக் அடித்த நிலையில் ஆட்டோவில் பயணம் செய்த சத்யா ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

 அப்போது அவர் பயணித்து வந்த அதே ஆட்டோ அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதே ஆட்டோவில் பயணம் செய்த ரஞ்சனி படுகாயமடைந்து மயக்கம் அடைந்த நிலையில் அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி