ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் மாவட்ட செயலாளர் சுகுமார் உத்தரவின் பேரில் இன்று (ஜனவரி 17) மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 108ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எம். ஜி. ஆர் உருவப்படத்திற்கு அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.