குடியாத்தம் - Kudiyatham

மீட்பு பணிகள்: தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு வீரர்கள்

மீட்பு பணிகள்: தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு வீரர்கள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் படகு, பாதுகாப்பு கவசம் உறை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயல்விளக்கம் நடந்தது. 20 தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு முறைகள் குறித்து விளக்கினர். மழைக்காலங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்களை பாதுகாப்பு கவச உடை அணிந்து மீட்பது, சாலை விபத்து நடைபெறும் போது இடிபாடுகளில் சிக்கியவர்கள் நவீன கருவிகளைக் கொண்டு இரும்பை உடைத்து மீட்பு பணிகள் மேற்கொள்வது, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வரும்போது அவற்றைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பது, பேரிடர் காலங்களில் சுய பாதுகாப்பு மேற்கொள்வது, வீடுகளில் தாழிட்டு கொண்டவர்களை மீட்பது போன்ற பணிகளை குறித்து தத்ருபமாக தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా