குடியாத்தம் - Kudiyatham

வேலூர்: திருட்டு வழக்கு..பெண் உள்பட 5 பேர் கைது

வேலூர்: திருட்டு வழக்கு..பெண் உள்பட 5 பேர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவாநகர் பகுதி சேர்ந்த சரவணன் என்பவர் அதே பகுதியில் தனது வீட்டின் அருகே உணவகம் நடத்தி வருகிறார்.  கடந்த மாதம் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நிலையில் இதுகுறித்து சரவணன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் நகர போலீசார் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (19), ரஞ்சித் (20) ஆகிய சகோதரர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி (20) மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்ற பெண்ணை தேடி வந்த நிலையில், அவர்கள் குடியாத்தம் அருகே செதுக்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் நகர போலீசார் அங்கு சென்று சூர்யா, ரஞ்சித், பூபதி, ரஞ்சிதா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా