புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வேலூர் மாவட்டத்திற்கும் கனமழை வாய்ப்பு அறிவித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவம்பர் 30) ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் இரவு வேளையில் குடியாத்தம் நகராட்சி, பிச்சனூர்பேட்டை மற்றும் புவனேஸ்வரிபேட்டை மற்றும் சீவூர் ஊராட்சி, கள்ளூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தற்போது முன்னேற்பாடுகள் மற்றும் பல சூழல் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.