நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் விழா

72பார்த்தது
நெமிலி பாலா பீடத்தில் பொங்கல் விழா
நெமிலி பாலா பீடத்தில் பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்னை பாலாவுக்கு பீட நிர்வாகி மோகன்ஜி சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்தார். பாபாஜி குருஜி தலைமையில் ஆத்மிகக்குடும்பங்கள் பாலா பாராயணம் செய்தனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு நாகலட்சுமி எழில்மணி மஞ்சள் கிழங்கு, கரும்பு மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பாலா பீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பாலா பீடத்தினர், பாலா ஆத்மிகக் குடும்பத்தினர், நெமிலி இறைபணி மன்ற அங்கத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி