சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது தான் இந்த டிக் டாக் செயலி. இதனை, அமெரிக்க அரசும் சட்டம் இயற்றி நேற்று (ஜன.19) இந்த செயலியை தடை செய்தது. இந்த நிலையில், இன்று (ஜன.20) அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. “டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்ட் டிரம்புக்கு நன்றி” என நிறுவனம் தெரிவித்துள்ளது.