பரந்தூரில் அமையும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன. 20) சந்திக்கும் நிலையில் அது திமுகவுக்கு நெருக்கடி கொடுக்குமா என அக்கட்சியை சேர்ந்த ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். "திமுகவுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது, அமைச்சர் தங்கம் தென்னரசு பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்த காரணத்தை தெளிவாக கூறியிருக்கிறார்" என்றார்.