ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
ராணிப்பேட்டை: பயிர் சேதத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது பயிர்களை காக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தாத விவசாயிகள் இ- சேவை மையம் மூலம் நவ. 15ந் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.