அரக்கோணம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!

79பார்த்தது
ராணிபேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள், முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தாலுகா இன்ஸ் பெக்டர் பழனிவேல், டவுன் இன்ஸ்பெக்டர் தங் ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி