வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் உள்ள கோபாலபுரம் பகுதியில் வழி தவறி பெண் மயில் ஒன்று வந்துள்ளது.
மேலும் அது வீட்டுக்கு வீடு அங்கும் இங்கும் தாவிய நிலையில் நாய்கள் கடித்து விடுமோ அல்லது அதற்கு காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலை பத்திரமாக பிடிக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் இது குறித்து குடியாத்தம் வனத்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடியும் மயிலை பிடிக்க முடியவில்லை. அது வீட்டின் மேல் தாவியது மேலும் தீயணைப்புத் துறையினர் அருகே சென்றவுடன் அது அங்கிருந்து பறந்து அருகே இந்த மரத்தின் மேலே தஞ்சமடைந்தது.
இதனையடுத்து மயிலை பிடிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் திரும்பிச் சென்றனர். இதனால் கோபாலபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.