திருப்பத்துார் நகராட்சி கடை வாடிகையில் குளறுபடி இருப்பதாக நகராட்சி கடை வியாபாரிகள் கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு வழங்கினர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
திருப்பத்துார் புது பஸ் ஸ்டாண்டு, சக்தி நகர், மீனாட்சி நிலையம், அண்ணாமலை வணிக வளாகம், காயிதே மில்லத் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக 400க்கும் மேற்பட்ட கடைகள் வாடகை விடப்பட்டுள்ளது. அதில் தரைத்தளம், முதல் தளம் அடங்கும்.
இந்நிலையில் நகராட்சி கடை வாடகை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை அன்றைய மார்க்கெட் நிலவரப்படி வாடகை தொகை உயர்த்தப்படும். அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கனவே செலுத்தும் வாடகை தொகையில் இருந்து 15 சதவீதம் உயர்த்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது கடை வாடகை 7 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அதிலும் தரை தளத்தை விட முதல் தளத்தின் வாடகை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் இந்த வாடகை தொகையில் குளறுபடி உள்ளது.
எனவே அனைத்து நகராட்சி கடை உரிமையாளர்களை ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கடை வாடகை உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்தனர்.