வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகர்க் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அவரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து ஐஜி அஸ்ராகர்க் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் எத்தனை பேர் தலைமறைவாக உள்ளனர் என்று கேட்டறிந்தார்.