அரக்கோணம் தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து இன்று காலை சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரக்கோணம் எம்எல்ஏ ரவி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை அஞ்சல் அலுவலர் நடராஜன் அரக்கோணம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ரவி மற்றும் தபால் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.