அரக்கோணம் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயிலில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தி ஆகி பொதுமக்களுக்கு நோயை பரப்புகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்வதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எல்ஏ ரவி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.