அரக்கோணம் அடுத்த பள்ளூரில் பழமை வாய்ந்த வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அங்கு இன்று நாக பஞ்சமி கருட பஞ்சமி வளர்பிறை பஞ்சமி என முப்பெரும் பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.