தி.மலை: மாணவியர் விளையாட்டு விடுதியில் துணை முதல்வர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவியர் விளையாட்டு விடுதியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் விடுதியில் உள்ள மாணவியரின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிப்பதற்கான மளிகை பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அவற்றின் தரம் பற்றி மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 உட்பட, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு விடுதி மாணவிகளை வாழ்த்தி, குழுப்புகைப்படம் எடுத்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.