திருப்பூர் மன்னரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தன்னை பாஜக பிரமுகர் என மக்களிடம் முன்னிலைப்படுத்தி ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் சீட்டு கட்டி வந்தனர். தீபாவளி நெருங்கும் நிலையில் சீட்டு பணத்தை வாங்க பெண்கள் ஆர்வமுடன் இருந்துள்ளனர். இந்நிலையில், செந்தில்குமார் தலைமறைவானதால் பதறிய மக்கள் நடுரோட்டில் கதறி அழுது வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.