விஜய் நடிப்பில் உருவான 'லியோ' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள், நிறைய அழகான தருணங்கள். என் மனதிற்கு எப்போதும் நெருக்கமான படம் 'லியோ'. Love you so much விஜய் அண்ணா. இந்த படத்திற்காக வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்த அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.