தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படுவது அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இன்று (அக்., 19) நடைபெற்ற தென் மாநில காவல்துறை மாநாட்டில் பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்திகளை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார்.