திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (அக்.,18) வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, திருவண்ணாமலை அருகேயுள்ள கடம்பையில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - திருப்பத்தூர் மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த கழக முன்னணியினரும், தொ. மு. சவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக மாவட்டத்தின் எல்லையில் மேளதாளம் வழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, திமுக மாணவர் அணி துணை துணைத் தலைவர் கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.