போளூரில் தன்னைத் தானே கழுத்தறுத்துக் கொண்டு உயிரிழந்த பெண்.
போளூர் டவுன் குளத்துமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த வேலூரை சேர்ந்த சத்யா (34) என்ற பெண் கோயிலில் உள்ள எலுமிச்சை பழம் அறுக்கும் கத்தியில் தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.