கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

தி.மலை: மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

தி.மலை: மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமம் வடவாண்டை தெருவைச் சோ்ந்தவா் விவசாயி ராஜசேகரன் (34). இந்த நிலையில், நேற்று அழிவிடைதாங்கி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள குளக்கரையில் ராஜசேகரன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென ராஜசேகரன் மீது மின்னல் பாய்ந்தது. இதில் மயங்கிய ராஜசேகரனை அங்கு இருந்தவா்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜசேகரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா் ராஜசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
தி.மலை: ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி மிரட்டல், இருவர் கைது
Nov 03, 2024, 14:11 IST/ஆரணி
ஆரணி

தி.மலை: ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி மிரட்டல், இருவர் கைது

Nov 03, 2024, 14:11 IST
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (வயது 53). ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் இவரை, தீபாவளி தினமான அக். 31-ஆம் தேதி, மேல்நாகரம்பேடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்களான பிரசாந்த் (32), அசோகன் (28) ஆகியோா் அவதூறாகப் பேசினராம். மேலும், கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த பழனி 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக பிரசாந்த், அசோகன் ஆகிய போலீஸாா் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனா்.