தேற்றான் கொட்டை என்பது சேற்றுடன் கலங்கிய நீரை தெளிய வைக்க பயன்படுத்தப்படும் ஒரு மரத்தின் விதையாகும். குளம் மற்றும் ஊருணிளில் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். எனவே இந்த கொட்டையை பானைகளில் உள்பக்கம் தேய்த்து விடுவர். சில நிமிடங்களில் பானையில் உள்ள நீர் தெளிந்துவிடும். இந்த நீரை தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்றும், மெலிந்த தேகம் உடையவர்களை இந்த நீர் தேற்றும் என்றும் கூறப்படுகிறது.