திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமம் வடவாண்டை தெருவைச் சோ்ந்தவா் விவசாயி ராஜசேகரன் (34). இந்த நிலையில், நேற்று அழிவிடைதாங்கி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள குளக்கரையில் ராஜசேகரன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென ராஜசேகரன் மீது மின்னல் பாய்ந்தது. இதில் மயங்கிய ராஜசேகரனை அங்கு இருந்தவா்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜசேகரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா் ராஜசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.