தி.மலை: ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி மிரட்டல், இருவர் கைது

66பார்த்தது
தி.மலை: ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி மிரட்டல், இருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (வயது 53). ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் இவரை, தீபாவளி தினமான அக். 31-ஆம் தேதி, மேல்நாகரம்பேடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்களான பிரசாந்த் (32), அசோகன் (28) ஆகியோா் அவதூறாகப் பேசினராம். மேலும், கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த பழனி 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், சம்பவம் தொடா்பாக பிரசாந்த், அசோகன் ஆகிய போலீஸாா் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி