உடல் பருமன், தொப்பையை கரைக்க பிளாங்க் என்னும் உடல் பயிற்சி செய்யலாம். இதன் மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம் என கூறப்படுகிறது. உங்கள் வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து வலுவாக்குவதால் தொப்பை வெண்ணெய் போல் கரையும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் துரிதமடைந்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமனும் குறையும். பிளாங் பயிற்சியை தொடங்கும் போது, முதலில் எளிய முறையை பின்பற்றி, பின்னர் கடினமான முறையை பின்பற்றுவது நல்லது.