
செங்கம் அருகே சாலை விபத்து, உதவி செய்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிமலைகுப்பம் சந்திப்பில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்ட செய்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளரும் , செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.